உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷாருக்கானின் 60வது பிறந்தநாளில் வெளியான கிங் படத்தின் டீசர்!

ஷாருக்கானின் 60வது பிறந்தநாளில் வெளியான கிங் படத்தின் டீசர்!


‛பதான், ஜவான்' படங்களுக்கு பிறகு ஷாருக்கான் நடித்து வரும் படம் ‛கிங்'. இப்படத்தில் அவருடன் சுகானா கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சித்தார்த் ஆனந்த் இப்படத்தை இயக்கி வருகிறார்.

200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் 2026ம் ஆண்டு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் நேற்று ஷாருக்கானின் 60வது பிறந்த நாளையொட்டி இந்த கிங் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது படக்குழு. அதிரடியான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ள அந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !