கமல்ஹாசன் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குதா? இல்லையா?
நடிகர், ராஜ்யசபா எம்பி கமல்ஹாசனின் 71வது பிறந்தநாள் நவம்பர் 7ம் தேதி வருகிறது. அதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், பிறந்தநாள் கொண்டாடங்கள் குறித்த அறிவிப்புகள், நிகழ்ச்சி நிரல்கள் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கமல்ஹாசன் எம்பி ஆன பின் வரும் முதல் பிறந்தநாள் என்பதால், இந்த ஆண்டு பிறந்தநாளை வழக்கம்போல் இல்லாமல் பல கலர்புல் நிகழ்ச்சிகள் நடத்தி, பல நலத்திட்டங்கள் வழங்கி விமர்சையாக கொண்டாட ஆசைப்படுகிறார்கள் அவருடைய நண்பர்கள், கட்சியினர் மற்றும் குடும்பத்தினர்.
கமலின் ராஜ்கமல் நிறுவனம், கட்சி நிர்வாகிகளும் பல்வேறு கொண்டாட்டங்களை மனதில் வைத்து இருக்கிறார்களாம். ஆனால், கமல் இன்னமும் அதற்கு நேரம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏன் என்று விசாரித்தால், நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் சென்னையில் இருக்க வாய்ப்பு இல்லை. அவர் வெளிநாட்டில் இருக்கவே வாய்ப்பு. அதனால், இந்த ஆண்டு சென்னையில் அவர் பிறந்தநாளை கொண்டாடவில்லை என்கிறார்கள்.
இந்த தகவல் கமல் ரசிகர்கள், நண்பர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஒருவேளை அவர் மனம் மாறி அல்லது பயணத்தில் மாற்றம் வந்தால் அவர் சென்னையில் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வாய்ப்பு, இல்லாவிட்டால் அவ்வளவுதான் என்கிறார்கள்.