உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா?

மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா?

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படம் இன்னும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்க வேண்டியது. ஆனால், அளவுக்கு அதிகமான வன்முறை, ரத்தம், சரியான கதை, திரைக்கதை இல்லாதது முக்கியமான காரணமாக விமர்சிக்கப்பட்டது. ரஜினிகாந்த், அமீர்கான், நாகர்ஜூனா, உபேந்திரா, சவுபின் ஷாகீர், என பல ஸ்டார்கள் இருந்தனர்.

அதேபோல், தனுஷை வைத்து அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் தோல்விக்கும் வன்முறை, சரியான திரைக்கதை இல்லாதது காரணம் என்று கூறப்பட்டது. இதற்குமுன்பு அருண் மாதேஸ்வரன் இயக்கிய ராக்கி, சாணிகாயிதம் படங்களிலும் ரத்தம் தெறித்தது. இந்த படங்களை வெற்றி படங்கள் வரிசையில் யாரும் குறிப்பிடவில்லை.

இந்நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி என்ற படத்தில் கதை நாயகனாக நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படமும் ரத்தத்தில் குளிக்கிறது என்பது முதல் டீசரில் தெளிவாக தெரிகிறது. இவர்கள் இருவரும் இவ்வளவு வன்முறையை தங்கள் படத்தில் காண்பிப்பது ஏன்? இவர்கள் மனதில் என்ன இருக்கிறது. மக்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறார்கள்.

ஒரு கமர்ஷியல் படத்தை ரத்தக்காடாக மாற்றுவதுதான் இவர்கள் பாணியா? இரண்டு பேருக்கும் ஒரு வெற்றி படம் தேவை என்ற நிலையில், மீண்டும் அதே வன்முறை பாதைக்கு செல்வது ஏன் என்று கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அவர்கள் தரப்போ சில நிமிட டீசரை வைத்து படத்தை முடிவு செய்யக்கூடாது. படம் வந்தபின் பாருங்கள் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Premanathan S, Cuddalore
2025-11-04 12:01:51

அவரவர் மனதில் உள்ள எண்ணங்கள் தான் படமாக வருகிறது