விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு
 
விஜய் நடித்த ‛புலி' படத்தை தயாரித்தவர் பி.டி. செல்வகுமார் இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் பி ஆர் ஓ ஆக, விஜய் மேனேஜராக இருந்தார். புலி பிரச்னைக்கு பின் அவரிடம் இருந்து ஒதுங்கினார். இப்போது கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து, வரும் சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட ஆசைப்படுகிறார். 
சென்னையில் இன்று அவர் அளித்த பேட்டி: விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகரனும் நானும் இணைந்து விஜயின் பல நிகழ்ச்சிகள், விழாக்களை நடத்தி இருக்கிறோம். பக்காவாக திட்டமிட்டு அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். அதனால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால் அனுபவம் இல்லாதவர்கள் தவெக.,வில் இருப்பதால் கரூர் சம்பவம் நடந்துள்ளது. மற்றபடி விஜய் பற்றி நான் அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை. வரும் சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சி அல்லது வேறு கட்சி, ஏன் தவெக அழைத்தால் கூட அவருடன் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட தயார். விஜய்க்கு இப்போது அனுபவம் வாய்ந்தவர்கள் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.