உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாமியாரான பாலிவுட் நடிகை

சாமியாரான பாலிவுட் நடிகை


'சக்திமான்', 'தியா அவுர் பாதி ஹம்' உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் நூபுர் அலங்கார். பல பாலிவுட் திரைப்படங்களில் வில்லி மற்றும் குணசித்ர வேடங்களிலும் நடித்துள்ளார். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் இவர் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பிஎம்சி வங்கி மோசடியில் பணம் முழுவதையும் இழந்தார்.

பிறகு ஆதரவாக இருந்த தாய், சகோதரி இறந்த விட்டதால் அவருக்கு வாழ்க்கை மீது அதீத வெறுப்பு ஏற்பட்டது. இதனால் தனது நடிப்பு மற்றும் ஆடம்பர வாழ்க்கையை துறந்து சாமியாராகிவிட்டார்.

தற்போது 'பீதாம்பரா மா' என்ற ஆன்மிக பெயருடன் இமயமலையில் வசித்து வருகிறார். அங்கு மிகவும் குறைந்த உடைகளுடன் எளிய வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார். பிச்சை எடுத்து சாப்பிட்டு குகைகளிலும், தொலைதூர கிராம பகுதிகளிலும் வசித்து வருகிறார்.

உலக வாழ்க்கையின் அழுத்தங்கள், செலவினங்கள் போன்ற கவலைகளின்றி நான் மிகவும் நிம்மதியாக வாழ்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !