உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜாய் கிரிசில்டா உடன் திருமணம், குழந்தை : ஒப்புக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

ஜாய் கிரிசில்டா உடன் திருமணம், குழந்தை : ஒப்புக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நாயகனாக நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரபல சமையல் கலைஞரான இவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர். ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா என்பவர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து ஏமாற்றி திருமண மோசடி செய்துவிட்டதாகவும், அவரால் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்து இருந்தார் ஜாய் கிரிசில்டா. ஆனால் இவரின் குற்றச்சாட்டை மறுத்து வந்த ரங்கராஜ், இதை சட்டப்படி எதிர்கொள்வேன் என கூறியிருந்தார்.

சமீபத்தில் மாநில மகளிர் ஆணையம் முன்பு நடந்த விசாரணையில் ரங்கராஜ் தன் மனைவி உடன் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். அதேப்போல் ஜாய் கிரிசில்டாவும் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்தச்சூழலில் கடந்தவாரம் ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை ரங்கராஜ் போன்றே இருப்பதாகவும், ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ் பிறந்து இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க போலீஸிற்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கிடையே ஜாய் கிரிசில்டா வெளியிட்ட பதிவில், ‛‛மகளிர் ஆணையம் முன்பு நடந்த விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்ததையும், இந்த குழந்தை தன்னுடையது தான் என ஒப்புக் கொண்டதாகவும்'' குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (5)

என்றும் இந்தியன், Kolkata
2025-11-05 16:02:45

வேடிக்கையிலும் வேடிக்கை இவர்களைப்போன்றவர்கள் அதாவது நடிகை, நடிகன், அரசியல்வாதி, மிக அதிக பணக்காரன், மிகப்பெரும் பதவியில் இருப்பவன், அதாவது ஒரே வார்த்தையில் பணத்தில் புரளுபவர்கள் இவர்களில் கணவன் மனைவி என்ற பந்தமே இருப்பதில்லை "இவனால் இவளால் எனக்கு நன்மையா" அப்போ சரி அவ்வளவு தான் இவர்கள் வாழ்க்கை. அப்படி இல்லையென்றால் அவரவர் வழிபார்த்து சென்று விடுவர், அவ்வளவே இவர்களது சித்தாந்தம்


Shekar, Mumbai
2025-11-05 09:36:59

ஈன பிறவிகள், சினிமா துறை எவ்வளவு கேவலமானது என்பதற்கு உதாரணம். அதிசயமாக சில விதிவிலக்குகளும் உண்டு, அவர்கள் எப்போதும் அடக்கி வாசிப்பார்கள். நடிகன் என்றால் நல்லவன் என்று அவர்களை அரியணை வரை கொண்ட செல்லும் இந்த மாக்களை எப்படி திருத்துவது?


thonipuramVijay, Chennai
2025-11-05 02:59:09

யார்டா இந்த மாதம்பட்டி றோங்கராஜ் ??? இந்த நாய் இருந்தால் என்ன செத்தால் நமக்கென்ன ...இந்த சொறிநாயின் தகவல்களை போட்டு நாட்டுக்கு என்ன நல்லது நடக்கப்போகிறது ?


Prasanna Krishnan R
2025-11-04 16:14:47

கொடூரமான வஞ்சகன்.


கொங்கு தமிழன் பிரசாந்த்
2025-11-04 14:29:33

DNA டெஸ்ட் எடுத்தால் மாட்டிக் கொண்டுவிடுவார். அதற்கு ஒத்துகொள்வதே மேல்.