உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ஒரு அதிரடி, மாஸ் என்டர்டெயின் படம் : விஷால்

மீண்டும் ஒரு அதிரடி, மாஸ் என்டர்டெயின் படம் : விஷால்

நடிகர் விஷால், இயக்குனர் சுந்தர்.சி கூட்டணியில் ஆம்பள, ஆக் ஷன், மத கஜ ராஜா ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் மத கஜ ராஜா படம் பல ஆண்டு போராட்டத்திற்கு பின் இந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்றது. கடந்த மாதத்தில் இந்த படத்தின் புரொமோ ஷூட் படப்பிடிப்பு ஆக் ஷன் காட்சிகளுடன் நடைபெற்றது என நாம் தெரிவித்திருந்தோம். இப்போது இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விஷால் வெளியிட்ட வீடியோவில் இவர்கள் கூட்டணியில் வெளியான மூன்று படங்களின் ஆக் ஷன் காட்சிகளை வெளியிட்டு மீண்டும் ஒரு அதிரடி, மாஸ் என்டர்டெயின் படம் என விஷால் அறிவித்துள்ளார். இதற்கிடையில் சுந்தர் சி, ரஜினியை வைத்து புதிய படம் இயக்கவுள்ளார் என்கிற செய்தி வெளியானது. விஷால் படத்தை முடித்ததும் ரஜினி படத்தை முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !