நாகசைதன்யா 24வது படத்தில் மீனாட்சி சவுத்ரி முதல் பார்வை வெளியீடு
ADDED : 2 days ago
விருபாக்ஷா பட இயக்குனர் கார்த்திக் வர்மா தண்டு இயக்கத்தில் நாகசைதன்யா அவரது 24வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் சுகுமார் ரைட்டிங் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தை அறிவித்து சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்போது இதில் மீனாட்சி சவுத்ரி 'தக்சா' எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அவரின் முதல் பார்வையை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இவரின் கேரக்டர் போஸ்டரை பார்க்கையில் தொல்லியல் ஆய்வாளர் வேடத்தில் நடிக்கலாம் என தெரிகிறது.