உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிஜ வாழ்க்கையில் நடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை! : சொல்கிறார் பார்வதி

நிஜ வாழ்க்கையில் நடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை! : சொல்கிறார் பார்வதி


தமிழில் சசி இயக்கிய 'பூ' என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. அதன் பிறகு தனுசுடன் 'மரியான்', கமலுடன் 'உத்தம வில்லன்', விக்ரமுடன் 'தங்கலான்' உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ஊடகங்களில் அவர் சொல்லும் கருத்துக்கள் அவ்வப்போது மலையாள திரை உலகில் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தனது கருத்துக்கள் சர்ச்சையாவது ஏன் என்பது குறித்து தற்போது ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கிறார் பார்வதி. அதில், ''என்னை பொருத்தவரை என் மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுகிறேன். இப்படி நான் சொல்லும் கருத்துக்கள் தான் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அதற்காக நான் உண்மையை மறைத்து பொய்யாக பேச ஒரு போதும் விரும்பியதில்லை. மற்றவர்களிடம் என்னை நல்லவராக காட்ட வேண்டும் என்பதற்காக நிஜத்தை மறைத்து போலியான முகமூடியை அணிந்து கொள்ள நான் தயாராக இல்லை. அந்த வகையில் நான் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாமலிருப்பதே என் மீதான விவாதங்களுக்கு காரணம்,'' என்று தெரிவித்திருக்கிறார் பார்வதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !