உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு

டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு

வி கிரியேஷன்ஸ் எஸ்.தாணு தயாரிப்பில் மிஷ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிரெயின்'. இதில் ஜெயராம், நாசர், டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரிலீஸிற்கு தயாராகி ஓராண்டு ஆகிறது. ஆனாலும், இப்படத்தின் டிஜிட்டல், சாட்லைட் வியாபாரங்கள் தேங்கி நிற்பதால் ரிலீஸில் சிக்கல் நிலவுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு டிஜிட்டல், சாட்டிலைட் வியாபாரம் தேங்கி நின்றாலும் பரவாயில்லை, இம்மாதத்திற்குள் இப்படத்தை திரைக்கு கொண்டு வர வேண்டும் முடிவு செய்து பட வேலைகளை வேகப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !