உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை!

அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை!


'குட் பேட் அக்லி' படத்தை அடுத்து மீண்டும் அஜித்தின் 64வது படத்தையும் இயக்கப் போகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக சில முக்கிய நடிகர் நடிகைகளிடத்தில் தற்போது கால்சீட் பேசி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த வகையில், இந்த அஜித் 64வது படத்தில் இன்னொரு பிரபல நடிகரையும் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ள அவர், விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரில் ஒருவரை எப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்று முயற்சித்து வருகிறார். ஆனால் அப்படி அந்த இன்னொரு ஹீரோ இப்படத்தில் நடிக்கப்போவது பாசிட்டீவ் வேடமா? நெகட்டீவ் வேடமா? என்பது தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !