உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது


நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணியில் புதிய படம் உருவாவதாக அறிவித்தாலும், இன்னும் கதை, இயக்குனர் முடிவாகவில்லை என ரஜினியே கூறியிருந்தார். இதற்கிடையில் ரஜினி குறுகிய கால கட்டத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார். அப்படத்தை கமல் தயாரிப்பதாகவும் அதற்கான அறிவிப்பு கமல் பிறந்தநாளான நவ.,7ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்றே (நவ.,5) அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படம் வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்! ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 173'' எனப்பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (3)

தமிழ் நாட்டு அறிவாளி, Chennai
2025-11-06 11:15:42

எல்லோரும் எதோ ஒரு விதத்தில், ஒரு நேரத்தில் கை கட்டியே ஆகவேண்டும்


R.Selvaperumal, kuwait
2025-11-06 10:25:53

வாழ்த்துக்கள் சார் ...தலைவர் தலைவர்தான் ...எப்பவுமே. இனிய நண்பர்கள் இணைந்தது மகிழ்ச்சி....வாழ்த்துக்கள் தலைவா ....


angbu ganesh, chennai
2025-11-06 09:35:01

விட்டத எல்லாம் ரஜினி மூலம் பெற போகிறாரா கமல், கூடிய சீக்கிரம் ரெட் giant கிட்ட படம் போய்டும் இல்ல விநீயாேக உரிமை ஒண்ணுத்துக்கும் உதவாத நிதி கிட்ட போய்டும்