உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிந்தியில் படம் தயாரிக்கும் நடிகர் ராணா

ஹிந்தியில் படம் தயாரிக்கும் நடிகர் ராணா


கடந்த வருடம் வெளியான 'வேட்டையன்' படத்தில் வில்லனாக ராணா நடித்திருந்தார். அதன் பிறகு அவரது நடிப்பில் இப்போது வரை படம் எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில் வெளியான 'பாகுபலி தி எபிக்' ஒரு சின்ன ஆறுதல். அதே சமயம் ஒரு தயாரிப்பாளராக மாறி துல்கர் சல்மான் நடித்துள்ள 'காந்தா' திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில் அடுத்ததாக ஹிந்தியில் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார் ராணா. இதில் மனோஜ் பாஜ்பாய் கதையின் நாயகனாக நடிக்கிறார். புக்கர் விருது பெற்ற அரவிந்த் அடிகா எழுதிய 'லாஸ்ட் மேன் இன் டவர்' என்கிற நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த படத்தை பென் ரக்கி என்பவர் இயக்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !