உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏவிஎம் நிறுவனம் படம் தயாரிப்பதை நிறுத்தியது ஏன்? இயக்குனர் எஸ்.பி முத்துராமன்

ஏவிஎம் நிறுவனம் படம் தயாரிப்பதை நிறுத்தியது ஏன்? இயக்குனர் எஸ்.பி முத்துராமன்


சென்னையில் நடந்த அறியாத பசங்க என்ற பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசியது : பள்ளியில் படிக்கும் போது சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று பேசியவன் நான். சென்னைக்கு வந்து ஏவிஎம் ஸ்டூடியோவில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் எடிட்டிங் பழகினேன். பின்னர் உதவி இயக்குனராக வேலை செய்தேன். 20 ஆண்டுகளுக்கு பின் தான் கனி முத்து பாப்பா படத்தில் இயக்குனர் ஆனேன். என் அஸ்திவாரம் வலுவானது.

80 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள ஏ.வி.எம் நிறுவனம் இப்பொழுது படம் தயாரிப்பதில்லை. இது குறித்து அவர்களிடம் கேட்ட போது இப்போது படம் தயாரித்து விடலாம் ஆனால் வியாபாரம் செய்வது கஷ்டமாக இருக்கிறது என்கிறார்கள். அதனால்தான் அவர்கள் படம் தயாரிப்பதில்லை. அந்த காலத்தில் ஏவிஎம் நிறுவனத்தை உருவாக்கிய ஏவி. மெய்யப்ப செட்டியார் பக்கா ஸ்கிரிப்ட் இருந்தால் தான் ஒரு படத்தை தொடங்குவார். அதனால் தான் ஏவிஎம் படங்கள் வெற்றி பெற்றன. உழைப்பு ஒழுக்கம் இருந்தால் சினிமாவில் ஜெயிக்கலாம். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !