உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மதம் மாறிவிட்டேனா: பாடகர் மனோ சொன்ன பதில்

மதம் மாறிவிட்டேனா: பாடகர் மனோ சொன்ன பதில்

பாடகர் மனோ கடந்த மாதம் திருநள்ளாறு கோயிலுக்கு சென்று சனீஸ்வர பகவானை வழிபட்டார். அது போட்டோ வைரலானது. இந்நிலையில் நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா என்று சென்னையில் நிருபர்கள் கேட்க எம்மதமும் எனக்கு சம்மதம் என்று அவர் பதில் அளித்துள்ளார்.

பாடகர் மானோ மகன் துருவன், பித்தாக் புகழேந்தி இயக்கத்தில் 'வட்டக்கானல்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் . நாளை இந்த படம் ரிலீஸ். சென்னையில் நடந்த விழாவில் படம் குறித்து மனோ பேசியது: என் மகன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அவர் டைபாய்டு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதில் நான் கலந்துகொண்டு பேசுகிறேன். இந்த படத்தில் நானும் ஹீரோயின் அப்பாவாக சில காட்சிகளில் நடித்துள்ளேன்.
என் பாடலை இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என அனைத்து தரப்பினரும் கேட்கிறார்கள். நான் மும்மதத்துக்கும் சொந்தமானவன் எம்மதமும் சம்மதம் என்பது என் பாலிசி. பாடகர்களுக்கு மதம் கிடையாது, நான் மதம் மாறவில்லை என்றார்.
வட்டக்கானல் படத்தில் பாடகர் மனோ மகன் துருவன் அப்பாவாக ஆர் கே சுரேஷ் நடித்துள்ளார் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் விளையும் காளான் அதன் பாதிப்பு, சண்டை சச்சரவுகளை இந்த கதை பேசுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

Shankar, Mangaf
2025-11-06 14:52:43

சாத் சாத் ஸ்ரீ மஹாவிஷ்ணுமேல் ஈடு இணையற்ற பக்திகொண்டு ஸ்ரீமகாவிஷ்ணுவை நேரே ஸ்பரிசித்து தொட்டு வரம் பெற்ற மாபெரும் குழந்தை மகரிஷி துருவன் பெயரை கொண்டதற்கு மிகவும் அகம் மகிழ்தேன். சீக்கிரமே உங்கள் துருவன் நல்ல குணமடைவார்.


ஆதிநாராயணன்
2025-11-06 13:56:51

அருமையான விளக்கம் திரு.மனோ அவர்களே