பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு
ADDED : 8 hours ago
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ள படம் ‛பராசக்தி'. ஸ்ரீலீலாவிற்கு இது தான் முதல் தமிழ் படம். தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை தழுவி இப்படம் உருவாகி உள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது ஜிவிக்கு 100வது படம் மற்றும் 20வது ஆண்டில் அவரது இசையில் வரும் படமாகும். அதோடு சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகும். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து 'அடி அலையே' என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். ஏகாதசி பாடல் வரிகளை எழுத, ஷான் ரோல்டன், தீ ஆகியோர் இணைந்து இப்பாடலை பாடியுள்ளார்கள். தற்போது இந்தப்பாடல் வைரலாகி வருகிறது.