55 வயதான கேஜிஎப் நடிகர் புற்றுநோயால் மரணம்
கன்னடத்தில் யஷ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியாகி அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றியைப் பெற்றது கேஜிஎப் திரைப்படம். இந்த படத்தில் நடித்த பல நடிகர்கள் ரசிகர்களிடம் மிக பெரிய அளவில் பிரபலமானார்கள். அந்த வகையில் இரண்டு பாகங்களிலும் சாச்சா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் கன்னட நடிகர் ஹரீஷ் ராய். 55 வயதாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (நவ-6) காலமானார். கடந்த சில வருடங்களாகவே புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகியிருந்த ஹரிஷ் ராய் சமீபத்தில் அதன் நான்காம் கட்ட தாக்கத்தை எட்டி இருந்தார்.
63 நாட்களுக்கு ஒரு முறை 3.5 லட்சம் மதிப்பிலான ஊசி ஒன்றை செலுத்தி இவ்வளவு நாட்களாக அவர் தன் வாழ்நாளை நீட்டித்து வந்தார். கன்னட நடிகர் யஷ்ஷும் அவரது சிகிச்சைக்கு செலவு செய்துள்ளார் என்று ஏற்கனவே ஹரீஷ் ராய் கூறியுள்ளார். தற்போது புற்றுநோய் பாதிப்பு முற்றி அவர் மரணமடைந்துள்ளார். இதை தொடர்ந்து கன்னட திரை உலகினரும் ரசிகர்களும் ஹரீஷ் ராயின் மறைவுக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.