உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன்

சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன்

சென்னையில் நடந்த ஆட்டோகிராப் படத்தின் ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இந்த படத்தின் இயக்குனர் சேரன் பேசியதாவது : என்னை பற்றி, என் உதவியாளர்கள் நிறைய பேசினார்கள். என் வீட்டுக்கு வந்த உதவி இயக்குனர்களுக்கு உணவு அளித்துவிட்டு, நானும் என் மனைவியும் பட்டினியாக இருந்தது உண்டு. அவர்கள் என்னை விமர்சிக்க உரிமை கொடுத்து இருக்கிறேன். இப்படி எந்த இயக்குனரும் சுதந்திரம் கொடுத்தது இல்லை. அவர்களை என் மகன்கள் போல நடத்துகிறேன். இப்போதும் எப்போதும் அவர்கள் என்னை விமர்சிக்கலாம்.

எனக்கும் சினேகாவுக்குமான நட்பு 21 ஆண்டுகளாக தொடர்கிறது. ஒவ்வொரு பூக்களுமே பாடல் எனக்கும் பலமுறை நம்பிக்கை கொடுத்து இருக்கிறது. சினேகாவும் நிஜத்தில் அந்த பாடலை பாடி இருக்கலாம். அவருக்கும் நம்பிக்கை கொடுத்து இருக்கும். தோல்வியில் இருந்து மீண்டு ஜெயிப்பது தனி மகிழ்ச்சி கொடுக்கும். மீண்டும் இன்றைய தலைமுறைக்கு அப்படிப்பட்ட நம்பிக்கையை இந்த படம் கொடுக்கும்.

சினேகாவுக்கும், பிரசன்னாவுக்கும் திருமணம் நடக்க நானும் ஒரு காரணம். அந்த திருமணத்துக்கு சிக்கல்கள் வந்தபோது, பிரச்னையை அப்புறம் பார்த்துகிடலாம், முதல்ல திருமணம் செய்யுங்க என தைரியம் கொடுத்தேன். பிரசன்னா என் நல்ல நண்பர். இப்போதுள்ள தலைமுறைகள் பல விஷயங்கள் புரிந்து கொள்ள இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறோம். படம் எடுக்க அவ்வளவு கஷ்டப்பட்டோம். இப்போதும் படத்தை கொண்டாடுகிறார்கள். எவருடைய தவறையும் இப்போது சுட்டி காண்பிப்பது இல்லை. அதை ரசித்துவிட்டு போகிறேன். ஆட்டோகிராப் கதையில் பிரபுதேவா, ஸ்ரீகாந்த் நடிக்க வேண்டியது கடைசியில் சூழ்நிலை காரணமாக நான் நடித்தேன்.

இவ்வாறு சேரன் பேசினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !