பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 4 minutes ago
மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக தயாராகி வரும் படம் விலாயத் புத்தா. எழுத்தாளர் இந்து கோபன் எழுதிய விலாயத் புத்தா நாவலை அடிப்படையாகக் கொண்டு அதேபெயரில் இந்த படம் உருவாகி வருகிறது. அய்யப்பனும் கோஷியும் புகழ் மறைந்த இயக்குனர் சாச்சி அவரது மறைவுக்கு முன் அடுத்ததாக இந்த படத்தை தான் இயக்க வேண்டும் என முடிவு செய்திருந்த நிலையில் தான் அது நிறைவேறாமலேயே இறந்து போனார்.
அதன்பிறகு அவருடைய சீடரான ஜெயன் நம்பியார் என்பவர் தற்போது இந்த படத்தை இயக்கியுள்ளார். மரக்கடத்தல் பின்னணியில் புஷ்பா பட பாணியில் இந்த படம் உருவாகி உள்ளது என அடுத்தடுத்து வெளியான டீசர்கள் மூலம் உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படம் வரும் நவம்பர் 21ஆம் தேதி வெளியாவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.