உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சைபர் கிரைமில் சின்மயி புகார்

சைபர் கிரைமில் சின்மயி புகார்

பின்னணி பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி தெலுங்கு நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது ராகுல் ரவீந்திரன் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ‛தி கேர்ள் பிரண்ட்' என்கிற படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படம் இன்று (நவ-7) வெளியாகியுள்ளது.

இந்த படம் குறித்து அவ்வப்போது பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பேசி வரும் ராகுல் ரவீந்திரன் தனது மனைவி சின்மயி பற்றி கூறும்போது, “என் மனைவி தாலி அணிந்து கொள்வதும் அணியாததும் அவர் விருப்பத்திற்கே நான் விட்டுவிட்டேன். அவரது உரிமையிலும் சுதந்திரத்திலும் நான் தலையிட விரும்பவில்லை” என்று தனது பெருந்தன்மை பற்றி வெளிப்படுத்தி இருந்தார்.

ஆனால் அவரது இந்த கருத்தை தொடர்ந்து அவருக்கு மட்டுமல்ல, அவரது மனைவியான சின்மயியின் சோசியல் மீடியா பக்கத்திலும் பல அவதூறான கருத்துக்களை பதிலாக பதிவிட துவங்கினார்கள். இதனை தொடர்ந்து அவர்களில் சிலரை அடையாளம் காட்டி சைபர் கிரைம் போலீசாரை டேக் செய்து, தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு புகார் பதிவிட்டு இருந்தார் சின்மயி. இதனை கவனித்த கிரைம் பிராஞ்ச் கமிஷனர் சஜ்ஜனார் ஐபிஎஸ் இதை ஒரு புகாராக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதும் அவருக்கு சின்மயி நன்றி தெரிவித்துக் கொண்டதுடன் விரைவில் இந்த அவதூறு பேச்சுக்களை முடிவுக்கு கொண்டு வருமாறு அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !