தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம்
ADDED : 49 days ago
சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநாயகனாக நடித்த டைஸ் இரே திரைப்படம் வெளியானது. ஹாரர் திரில்லர் ஆக வெளியான இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த வருடம் மம்முட்டியை வைத்து பிரம்மயுகம் என்கிற வெற்றி படத்தை கொடுத்த ராகுல் சதாசிவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மலையாளத்தில் இதன் வெற்றியைத் தொடர்ந்து இந்த வாரம் முதல் தெலுங்கிலும் இந்த படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இந்த படம் மலையாள மொழியிலேயே வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது தெலுங்கிலும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.