கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!
ADDED : 11 hours ago
ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகையான கத்ரினா கைப், ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ஹிருத்திக் ரோஷன் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் விக்கி கவுசலை காதலித்து வந்த கத்ரினா கைப், கடந்த 2021ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்ரினா கர்ப்பமாக இருந்த நிலையில் அது குறித்த புகைப்படத்தை அவர்கள் இணையத்தில் வெளியிட்டிருந்தார்கள். இந்நிலையில் இன்று கத்ரினாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இது குறித்த தகவலை அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். அதையடுத்து திரையுலகினரும், ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.