உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை

உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் அதர்ஸ் திரைப்படம் இன்று ரிலீஸாகி உள்ளது. முன்னதாக இப்படம் தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் யுடியூபர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக ஒரு பேட்டியில் கவுரி ‛இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது' என விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில் நேற்று இப்படம் தொடர்பான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இரு யு-டியூபர்கள் இருவர் மாறி மாறி கவுரியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த கவுரி, ‛‛உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி. எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன்'' என பதில் அளித்தார். தொடர்ந்து அவர்கள் கவுரியை விடாமல் கேள்வி கேட்க அத்தனைக்கும் பதிலடி தந்தார். ‛‛இப்போது எடை பத்தி கேக்குறீங்க, அடுத்து என்னென்ன கேட்பீங்க. இதற்கு பெயர் ஜெர்னலிசம் கிடையாது'' என பதில் அளித்தார்.

இந்த விஷயம் பரபரப்பாக தொடர்ந்து கவுரிக்கு ஆதரவாக திரைப்பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்துள்ளனர். நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ‛‛“நேற்று எங்கள் சகோதரிக்கு நடந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இனி எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கலந்து ஆலோசிக்க தேவையான முன்னெடுப்புகளை தொடங்குவோம்” என தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நடிகை குஷ்பு, பாடகி சின்மயி உள்ளிட்டோரும் கவுரிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !