அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்!
ADDED : 8 hours ago
அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்த காட்டி என்ற படம் கடந்த செப்டம்பர் ஐந்தாம் தேதி .திரைக்கு வந்தது. அதையடுத்து மலையாளத்தில் 'கதனார் தி வைல்ட் சோர்சரர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அனுஷ்காவுடன் ஜெயசூர்யா, பிரபு தேவா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ரோஜின் தாமஸ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.
இந்த நிலையில் இன்று அனுஷ்காவின் பிறந்தநாளையொட்டி அவரது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் ஒன்பதாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற கிறிஸ்தவ பாதிரியார் கடமடத்து கதனாரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகிறது. அவர் மந்திர சக்திகளை கொண்டிருந்தவராகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரில்லர் படத்தில் அனுஷ்கா, அமானுஷ் வேடத்தில் நடிக்கிறார்.