உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பான் இந்தியா படமாக வெளியாகும் ஹனி ரோஸின் ரேச்சல் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பான் இந்தியா படமாக வெளியாகும் ஹனி ரோஸின் ரேச்சல் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல முன்னணி ஹீரோக்களின் படங்களே பான் இந்திய ரிலீஸிற்கு தயக்கம் காட்டி வரும் நிலையில் நடிகை ஹனிராஸ் நடித்துள்ள ரேச்சல் திரைப்படம் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தி என ஒரே நேரத்தில் பான் இந்திய ரிலீஸ் ஆக வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழில் சிங்கம் புலி, படம் துவங்கி கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான பட்டாம்பூச்சி படம் வரை மலையாளம் மற்றும் தமிழில் தொடர்ந்து சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஹனி ரோஸ்.

இந்த நிலையில் இந்த ரேச்சல் படத்தில் வித்தியாசமான அதிரடி ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஹனி ரோஸ். பழி வாங்கும் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தின் கதையை நடிகர் நிவின்பாலி நடித்த 1983, ஆக்சன் ஹீரோ பைஜூ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அப்ரிட் ஷைன் எழுதியுள்ளதுடன் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து தயாரித்தும் உள்ளார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !