உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சச்சினை இயக்கிய ஓஜி பட இயக்குனர்

சச்சினை இயக்கிய ஓஜி பட இயக்குனர்

கடந்த மாதம் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வெளியான ஓஜி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை சுஜித் என்பவர் இயக்கியிருந்தார். சில வருடங்களுக்கு முன்பு அதாவது பாகுபலி படத்திற்குப் பிறகு பிரபாஸை வைத்து சாகோ என்கிற படத்தை இயக்கியது இவர்தான். அந்த படம் இவருக்கு தோல்வியை பரிசளித்த நிலையில் தற்போது ஓஜி படத்தின் வெற்றி மூலம் மீண்டும் லைம் லைட்டுக்கு திரும்பி உள்ளார் சுஜித். இதனை தொடர்ந்து அடுத்து அவர் நானி நடிக்கும் படத்தை இயக்கத் தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது முன்னாள் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சினை வைத்து விளம்பர படம் ஒன்றை இயக்கியுள்ளார் சுஜித். பிரபல பெயிண்ட் நிறுவனம் ஒன்றின் தூதராக சச்சின் பொறுப்பில் இருக்கிறார். அந்த நிறுவனத்திற்காகவே சச்சின் நடிக்கும் விளம்பரப்படத்தை இவர் இயக்கியுள்ளார் என்று தெரிகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு சச்சினுடன் பணியாற்றிய தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் சுஜித்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !