உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் 'பிரம்மயுகம்'

ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் 'பிரம்மயுகம்'

கடந்த ஆண்டு வெளிவந்த மலையாள படமான பிரம்மயுகம் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் சினிமா பார்வையாளர்கள், விமர்சகர்களால் பெரும் வரவேற்பை பெற்றது. கருப்பு வெள்ளையில் தயாரான இந்த திகில் படம் மலையாள சினிமாவின் ஒரு மைல்கல்லாக பார்க்ககப்படுகிறது. இதில் நடித்த மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சர்வதேச கவனத்தை ஈர்த்த இந்தப் படம் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆஸ்கரின் அகாடமி மியூசியம் ஆப் மோஷன் பிக்சர்ஸில், வரும் ஜனவரி 10ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை திரையிடப்படுகிறது. இந்தப் படத்தில் மம்முட்டியுடன் அர்ஜூன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் நடித்திருந்தனர். ஷெஹ்னாத் ஜலால் ஒளிப்பதிவு செய்ய, கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்திருந்தார். ரோனெக்ஸ் சேவியர், எஸ்.ஜார்ஜ் வசனம் எழுதியிருந்தனர். சென்னை: நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ், ஒய்நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க, ராகுல் சதாசிவன் இயக்கிய படம் இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !