உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா

கூலி படத்திற்கு பின் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இதையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் சுந்தர். சி இயக்கும் தனது 173வது படத்தில் நடிக்கப் போகிறார். அருணாச்சலம் படத்திற்கு பிறகு 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடிக்கிறார்.

ரஜினி திரையுலகில் நடிக்க வந்து 50 ஆண்டுகள் கடந்து விட்டதை அடுத்து அவருக்கு பாராட்டு விழா நடத்த சிலர் திட்டமிட்ட நிலையில் இப்போதுவரை அந்த விழா நடக்கவில்லை. இந்நிலையில், தற்போது நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா நடத்த அந்த குழு திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !