உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி

2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி

விஜய் நடிப்பில் கோட் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார். இந்த நிலையில் 2017ல் அவர் இயக்கிய பார்ட்டி என்ற படம் 2018 ஆம் ஆண்டு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது வரை அப்படம் கிடப்பில் கிடைக்கிறது.

இப்படத்தில் ஜெய், சிவா, ஜெயராம், ஷாம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி இசையமைத்துள்ள இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் 7 ஆண்டுகளாக திரைக்கு வராமல் கிடப்பில் கிடக்கும் இந்த படம் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரியில் திரைக்கு இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் இந்த பார்ட்டி படமும் வெற்றி பெறும் என்று அப்படக் குழு எதிர்பார்க்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !