உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை

உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன் நடிப்பில் அதர்ஸ் படம் வெளியாகி உள்ளது. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருவர் கவுரியின் எடையை வைத்து கேள்வி எழுப்பினர். இதற்கு கவுரி, ‛‛உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். எடை பத்தி கேக்குறீங்க, அடுத்து என்னென்ன கேட்பீங்க. இது முட்டாள்தனமானது'' என நேரலையில் கோபமாக அந்த நபர்களுக்கு பதிலளித்தார். இது வைரலாக இதுபோன்ற கேள்விகளுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. குஷ்பு, சின்மயி உள்ளிட்டோர் கவுரிக்கு ஆதரவு தந்துள்ளனர்.

தொடர்ந்து இவ்விவாகரம் தொடர்பாக தேசிய அளவில் கவுரி பேட்டி அளித்து வருகிறார். இந்நிலையில் கவுரி அளித்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ‛‛செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்த விஷயங்கள் எதிர்பாராத விதமானது. ஒரு நடிகையாக என் தொழில் நான் கேள்விகளுக்கு ஆளாக்கப்படுவது இயல்பு தான் என்றாலும் ஒருவரின் உடல் அல்லது தோற்றத்தை குறித்து பேசுவது தேவையற்றது. என் படம் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்டிருக்கலாம். ஒரு ஆண் நடிகரிடம் இதே தொனியில் அந்த கேள்வியை கேட்க முடியுமா. கடினமான சூழலில் என் நிலையை உறுதியாக நிற்க முடிந்ததற்கு நன்றி.

உருவக் கேலியையும், சாத்தியப்படாத உருவ அமைப்பையும் சாதாரணமாக்குவது இது புதிதல்ல. இருப்பினும் இந்த விவகாரம் இது ஒரு நினைவூட்டலாக இருக்கும் என்று நம்புகிறேன். இதில் தொடர்புடைய நபரை இலக்காக கொண்டு யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். இந்த தருணத்தை பயன்படுத்தி, அனைத்து தரப்புகளிலும் அதிக புரிதல், உணர்திறன் மற்றும் மரியாதையுடன் முன்னேறுவோம். இந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்த நடிகர் சங்கம், மலையாள நடிகர் சங்கம், திரையுலகினர், பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருத்தம் தெரிவித்த யுடியூபர்
இதற்கிடையே கவுரி கிஷனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட யுடியூபர் வருத்தம் தெரிவித்துள்ளார். ‛‛நான் அந்த பெண்ணை பாடி ஷேமிங் செய்யவில்லை. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வால் அவருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !