‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு
ADDED : 7 hours ago
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் ‛ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. வருகிற பொங்கலை முன்னிட்டு ஜன., 9ல் படம் வெளியாகிறது.
விஜய் அரசியலுக்கு செல்வதால் அவரின் கடைசிப்படம் என இதை அறிவித்துள்ளார். இதனால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ‛தளபதி கச்சேரி' என்ற முதல்பாடலை வெளியிட்டுள்ளனர். அறிவு எழுதி உள்ள இந்த பாடலை விஜய் உடன் அனிருத் மற்றும் அறிவு ஆகியோரும் இணைந்து பாடி உள்ளனர். ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் துள்ளல் பாடலாக வெளியாகி உள்ளது. ஆயிரக்கணக்கான நடன கலைஞர்களுடன் விஜய் இந்த பாடலில் நடனமாடி உள்ளார்.