கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்'
ADDED : 7 hours ago
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛அமரன்'. வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி இப்படம் வந்தது. ஜிவி பிரகாஷ் இசையமைக்க, கமல் நிறுவனம் தயாரித்தது. சுமார் 300 கோடி வசூலித்து சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் பிளாக்பஸ்டர் உச்ச வசூல் படமாக மாறியது.
இந்நிலையில் இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்கிறது. கோவாவில் இம்மாதம் நடக்கும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் தங்க மயில் விருதுக்கான போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் 81 நாடுகளை சேர்ந்த 230-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன.