உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முந்தைய சாதனையை முறியடிக்குமா விஜய் - அனிருத் கூட்டணி?

முந்தைய சாதனையை முறியடிக்குமா விஜய் - அனிருத் கூட்டணி?


நடிகர் விஜய், இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி இசையால் ஒரு வெற்றிகரமான கூட்டணி என இதற்கு முன்பு சில படங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் 'கத்தி' படத்தில் இணைந்த இந்தக் கூட்டணி, தொடர்ந்து, “மாஸ்டர், பீஸ்ட், லியோ” ஆகிய படங்களிலும் இணைந்து சில பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தது.

தற்போது 'ஜனநாயகன்' படத்தில் மீண்டும் இணைந்துள்ளது இக்கூட்டணி. அப்படத்தின் முதல் சிங்கிளான 'தளபதி கச்சேரி' பாடல் நேற்று மாலை வெளியானது. தற்போது அந்தப் பாடல் யு டியுப் தளத்தில் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ரியல் டைம் பார்வைகளாக 10 மில்லியனைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்த் திரையுலகத்தில் 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடலாக 'தி கோட்' படத்தின் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வந்த 'விசில் போடு' பாடல் 24.8 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது. விஜய், அனிருத் கூட்டணியின் அதற்கு முந்தைய சாதனையான 'அரபிக்குத்து' பாடலின் 23.8 மில்லியன் பார்வைகளை அது முறியடித்திருந்தது.

'ஜனநாயகன்' படத்தின் 'தளபதி கச்சேரி' விஜய், அனிருத் கூட்டணியின் முந்தைய 'லியோ' சாதனையை முறியடிக்குமா அல்லது 'தி கோட்' படத்தின் சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடிக்குமா என்பது அடுத்த சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !