உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கு லிரிக் வீடியோவில் புதிய சாதனை படைத்த ஏஆர் ரஹ்மானின் 'பெத்தி'

தெலுங்கு லிரிக் வீடியோவில் புதிய சாதனை படைத்த ஏஆர் ரஹ்மானின் 'பெத்தி'


புச்சிபாபு சனா இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்குப் படம் 'பெத்தி'. அடுத்த வருடம் மார்ச் மாதம் 27ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலாக 'சிக்ரி சிக்ரி' பாடலை இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிட்டனர்.

இப்பாடல் 24 மணி நேரத்தில் 29 மில்லியனுக்கும் கூடுதலான பார்வைகளைப் பெற்று தெலுங்கு லிரிக் வீடியோவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு 'புஷ்பா 2' படப்பாடலான 'கிஸ்ஸிக்' லிரிக் வீடியோ பாடல் 24 மணி நேரத்தில் பெற்ற 27 மில்லியன் சாதனையை 'சிக்ரி' பாடல் முறியடித்துள்ளது.

தற்போது தெலுங்கில் 34 மில்லியன் பார்வைகள், ஹிந்தியில் 12 மில்லியன், தமிழில் 2.7 மில்லியன், கன்னடத்தில் 1.4 மில்லியன், மலையாளத்தில் 1.5 மில்லியன் பார்வைகளை இந்தப் பாடல் கடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !