உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' படத்திற்குக் கடும் சவாலாக இருக்கும் 'ராஜா சாப்'

'ஜனநாயகன்' படத்திற்குக் கடும் சவாலாக இருக்கும் 'ராஜா சாப்'


2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைய முன்னிட்டு தமிழ் சினிமாவின் வெளியீட்டு ஆரம்பம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் விஜய் நடிக்கும் கடைசி படமான 'ஜனநாயகன்' படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. அடுத்து ஜனவரி 14ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' வெளியாக உள்ளது. இரண்டு படங்களுமே அரசியல் களத்துடன் உருவாகியுள்ள படம்.

இருந்தாலும் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தை பான் இந்தியா படமாக வெளியிடுவதில் கடும் சவால் ஒன்று இருக்கிறது. பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. வட இந்திய மாநிலங்களிலும், தெலுங்கு மாநிலங்களிலும் அப்படம் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. அதனால், அப்படத்திற்கு அங்கெல்லாம் நிறைய தியேட்டர்கள் கிடைத்துவிடும்.

தமிழகம், கேரளா மாநிலங்களில் விஜய் படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கலாம். 'ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் கன்னடத் தயாரிப்பு நிறுவனம் என்பதால் கர்நாடகாவில் அதிக தியேட்டர்களை எப்படியும் பெற்றுவிடுவார்கள்.

இருந்தாலும் வியாபார ரீதியாக தெலுங்கு மாநிலங்கள், வட இந்திய மாநிலங்களில் தயாரிப்பாளர் எதிர்பார்க்கும் தொகை கிடைக்குமா என்பது சந்தேகம் என வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்திலும் விஜய் ரசிகர்கள் அவரது அரசியல் கட்சியினர் தவிர மற்ற நடிகர்களின் ரசிகர்கள், கட்சியினர் படத்தைப் பார்க்க முன் வருவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் மீதான இமேஜ் குறைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். மேலும், பெண்களுக்கான இலவசம் குறித்து அவர்களது கட்சியினர் விமர்சிப்பதால் பெண்களும் அவரது படத்தைப் பார்ப்பார்களா என்பதும் மற்றொரு கேள்வியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !