பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன்
ADDED : 42 minutes ago
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'பராசக்தி'. 1965 காலகட்டத்தில் ஹிந்தி திணிப்பு போராட்டம் குறித்து இப்படம் உருவாகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்தவாரம் அடி அலையே என்ற முதல் பாடலை வெளியிட்டனர். அந்தபாடலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்தது. இத்திரைப்படம் 2026ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதியன்று பொங்கல் பண்டிகை அன்று வெளியாவதால் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை வேகப்படுத்தியுள்ளனர். இப்போது ரவி மோகன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். ஓரிருநாளில் இதன் டப்பிங்கை ரவி முடிப்பார் என தெரிகிறது.