மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண்
ADDED : 46 days ago
மெட்ரோ, கோடியில் ஒருவன் ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். கடந்த பல மாதங்களாக 'நான் வைலன்ஸ்' எனும் படத்தை இயக்கி வருகிறார். இதில் மெட்ரோ சிரிஷ், சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன், கருடா ராம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தில் சிரிஷ் உடன் இணைந்து ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடுகிறார் என படக்குழு தெரிவித்துள்ளனர். சமீபத்தில் சூர்யாவுடன் ரெட்ரோ படத்தில் ஸ்ரேயா ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஜெயில் பின்னனி கதையை மையப்படுத்தி ஆக் ஷன் படமாக உருவாகி வருகிறது.