திடீரென உயரும் 'தளபதி கச்சேரி' பாடலின் 'வியூஸ்'
எச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜனநாயகன்'. அப்படத்தின் முதல் சிங்கிளான 'தளபதி கச்சேரி' பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
அப்பாடல் விஜய்யின் முந்தைய பாடல்களின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை மட்டுமே கடந்தது. தமிழ் சினிமாவின் 24 மணி நேர சாதனையில் 'தி கோட்' படத்தின் 'விசில் போடு' பாடல் 24.8 மில்லியன் பார்வைகளைப் பெற்றதுதான் தற்போது வரை சாதனையாக உள்ளது.
நேற்று இரவு வரை 15 மில்லியன் இருந்தது இன்று காலையில் 30 மில்லியனைக் கடந்துள்ளது. திடீரென ஒரே இரவில் இப்படி 15 மில்லியன் பார்வைகளை உயர்ந்தது எப்படி என ஆச்சரியப்பட வைத்துள்ளது. பாடலுக்கு வரவேற்பு இல்லாத காரணத்தால் 'பாட்' மூலம் இப்படி உயர்த்துவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் 'டிரோல்' செய்து வருகிறார்கள்.