அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஸ்ரீகாந்த் போதை மருந்து பயன்படுத்தியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வழக்கு நடந்து வருகிறது.
இதற்கிடையில் இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது குறித்து அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை தொடர்ந்து நேற்று ஆஜரானார்.
நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜரானார். அவர் முககவசம் அணிந்தபடி வந்திருந்தார். அவரிடம் தொடர்ந்து இரவு வரை விசாரணை நடந்தது. சுமார் 10 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. அவரின் வாக்குமூலத்தை, 'வீடியோ' பதிவு செய்தனர்.