உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 70 கோடி வசூலித்த 'பைசன்'

70 கோடி வசூலித்த 'பைசன்'


மாரி செல்வராஜ் இடத்தில் துருவ்விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்த 'பைசன்' படம் இதுவரை 70 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில் இந்த வசூல் நிலவரத்தை அறிவித்துள்ளனர். தெலுங்கில் இந்த படம் பெரிய வெற்றி அடையவில்லை. தமிழில் மட்டுமே இந்த அளவு வசூலை ஈட்டி உள்ளது. தெலுங்கிலும் வெற்றி அடைந்திருந்தால் நூறு கோடி எட்டி இருக்கும் என கூறப்படுகிறது.

பைசனுக்கு போட்டியாக வந்த பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படம் தமிழ், தெலுங்கில் வெற்றி பெற்று 100 கோடி தாண்டி உள்ளது. ஆனாலும், மாரி செல்வராஜ், துருவிக்ரம் படம் முதன்முதலாக 70 கோடி வசூலை எட்டியது அவர்கள் தரப்பை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. டிஜிட்டல், சாட்டிலைட், ஆடியோ ரைட்ஸ் வியாபாரத்தை கணக்கிட்டால் இந்த படம் ஒட்டுமொத்தமாக 100 கோடி அளவுக்கு வசூலித்து இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !