உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி ஆகிய படங்களுக்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. இதனை இயக்குனர் அட்லீ தனது ஏ பார் ஆப்பிள் புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வந்தது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு சத்தமின்றி துவங்கியதாக சொல்கிறார்கள். அதேசமயம் இப்படத்திற்காக கதாநாயகி தேர்வு நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. தற்போது ஒரு வழியாக உறுதியாகியுள்ளது. இதில் கதாநாயகியாக மலையாள நடிகையான லிஜோ மோல் ஜோஸ் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் ஜெய் பீம், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !