ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பரவலாக நடித்து வருகிறார். இதுதவிர முன்னணி நடிகர்களின் படங்களில் கவர்ச்சி ஆட்டமும் போடுகிறார். இவர் திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. சினிமாவில் அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ இப்பவும் அதேப்போன்று இளமையாக உள்ளார். தமன்னா பல ஆண்டுகளாக தனது உடல் எடையை ஸ்லிம்மாக பராமரித்து வருகிறார். இப்போது முன்பைவிடவும் ஸ்லிம்மாக உள்ளார். இதற்காக அவர் ஊசி எடுத்துக் கொள்வதாக செய்தி பரவியது.
ஆனால் இதை மறுத்துள்ள அவர், ‛‛சினிமாவிற்கு வந்தபோது நான் எப்படி இருந்தேனோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறேன். நான் எந்த ஊசியும் எடுத்துக் கொள்ளவில்லை. பெண்களின் உடல் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறும். எனக்கும் அப்படித்தான். ஒரே மாதிரியாக இருக்காது. என்னை பொருத்தமட்டில் எனது உடலில் புதிதாக எதுவும் மாற்றம் தெரியவில்லை'' என்றார்.