உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ?

'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ?

எச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'தளபதி கச்சேரி' சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. 24 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வைகள் மட்டுமே பெற்றது. அதற்கடுத்து ஒரே இரவில் திடீரென 15 லட்சம் பார்வைகளை உயர்த்தினார்கள். பாடலுக்கு வரவேற்பு இல்லை என்று தெரிந்ததும் 'பாட்' வைத்து உயர்த்தி வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் 'டிரோல்' செய்தார்கள்.

விஜய்யின் முதல் சிங்கிள் என்றாலே பார்வைகள் அள்ளும், ஒரு பரபரப்பை ஏற்படுத்தும். ஆனால், 'தளபதி கச்சேரி' அப்படி எதையும் ஏற்படுத்தாது படத்தின் வினியோகம் வரை எதிரொலித்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் சொல்லும் விலைக்கு படத்தை வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகிறார்களாம். அரசியல் சூழல், தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' படத்தின் போட்டி சில பல காரணங்கள் அவர்களது தயக்கத்திற்குக் காரணம் என்கிறார்கள்.

இதனால், வினியோகஸ்தர்களை சமாளிக்க, விரைவில் அடுத்த பாடலை படக்குழு வெளியிடும் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

M Ramachandran, Chennai
2025-11-14 01:03:06

படத்தியய ஓடிஏ விடமாட்டார்கள் என்று தெரிந்து தான் தயக்கம். எதுக்கு ரிஸ்க் என்று விளக்குகிறார்கள்.