பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன்
ADDED : 2 minutes ago
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு கதை, ‛மா வந்தே' என்ற பெயரில் படமாக உருவாகி வருகிறது. மோடியின் 75 வது பிறந்தநாள் அன்று இப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். கிராந்தி குமார் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் தற்போது பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனும் ஒப்பந்தமாக இருக்கிறார். இவர் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு, நெல்சன் கே.கபூர், சாண்டி மாஸ்டர், அருண் குரியன், விஜய ராகவன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.