உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு

ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு


நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் 'கேர்ள் பிரண்ட்' என்கிற படம் வெளியானது. ராகுல் ரவீந்திரன் இயக்கிய இந்த படம் பெண்களுக்கு எதிராக ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஆண்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்றும் பெண்கள் அதிலிருந்து எப்படி தங்களை தற்காத்து வெளியே வரவேண்டும் என்பது குறித்தும் ஒரு கருத்தை சொல்லி இருந்தது. பெண்கள் மத்தியில் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ஜெகபதி பாபு நடத்தும் டாக் ஷோ ஒன்றில் ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டு பேசும்போது, ''பீரியட்ஸ் காலகட்டத்தில் பெண்கள் படும் அவஸ்தை என்னவென்று ஆண்களுக்கு புரிவதில்லை. எங்களின் மனநிலை அந்த நேரத்தில் எப்படி இருக்கும் என்பதை அவர்களுக்கு சொல்லியும் புரிய வைக்க முடியவில்லை. ஆண்களுக்கு ஒரு முறையாவது இப்படி மாதவிடாய் வந்தால் தான் பெண்கள் படும் கஷ்டங்கள் அவர்களுக்கு தெரிய வரும்'' என்று கூறியிருந்தார்.

இதற்கு வழக்கம் போல ஆணாதிக்க மனோபாவம் கொண்ட சிலர் ராஷ்மிகாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டனர். அதே சமயம் ஆண்களிலேயே பல பேர் ராஷ்மிகா சொன்னதில் என்ன தவறு, அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.. பெண்கள் அந்த சமயங்களில் படும் கஷ்டங்களை ஆண்கள் புரிந்து கொள்வது கிடையாது. புரிந்து கொள்ளவும் முடியாது என்கிற அர்த்தத்தில் தான் அவர் சொல்லி இருக்கிறார். அவர் சொன்ன கருத்தில் தவறு எதுவும் இல்லை என்று ராஷ்மிகாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !