சிரஞ்சீவி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா
ADDED : 18 hours ago
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தற்போது அவரது 157வது படமாக 'மனா சங்கரா வரபிரசாத்த் காரு' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதை பிரபல இயக்குனர் அனில் ரவிபுடி இயக்குகிறார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாராவும், முக்கிய வேடத்தில் கேத்ரின் தெரசாவும் நடிக்கின்றனர். ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ஒரு சிறப்பு பாடல் இடம் பெறுகிறது. அதில் நடனமாட நடிகை தமன்னா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அனில் ரவிபுடி இயக்கிய எப்2, எப்3 படங்களில் தமன்னா நடித்திருந்தார். மற்றும் அனில் ரவிபுடி இயக்கிய சரிலேறு நீக்கவொரு படத்தில் தமன்னா சிறப்பு பாடலுக்கு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.