இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி
ADDED : 10 minutes ago
இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான படம் 'பிச்சைக்காரன்'. விஜய் ஆண்டனியை ஹீரோவாக பிரபலமாக்கியது இப்படம். அதன்பின் பிச்சைக்காரன் 2 படம் உருவானபோது இவர்கள் கூட்டணி அமையவில்லை. இப்போது ‛நூறு சாமி' என்ற படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடத்தி வருகின்றனர். இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளதை விஜய் ஆண்டனி அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு மே 1ம் தேதியன்று திரைக்கு வருகிறது.