வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப்
ADDED : 3 minutes ago
பாலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குனர் அனுராக் காஷ்யப். தற்போது நடிகராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். தமிழில் இமைக்கா நொடிகள், மகாராஜா, லியோ, விடுதலை 2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் 'அன் கில் 123' என்கிற படத்தில் முதல்முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டார்லிங், எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, 100 போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார். இந்த படத்தில் சமூக வலைதள இன்ப்ளூயன்சர் கதாபாத்திரத்தில் அனுராக் காஷ்யப் நடிக்கின்றாராம். சமூக வலைதளம் மூலம் பிரபலமான நபரை வலைதளவாசிகள் ஒன்றிணைந்து அவரை தாக்கும்போது அந்த நபர் என்ன ஆவார் என்பது குறித்து தான் கதைக்களம் நகரும் என கூறப்படுகிறது.