உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள்

நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள்


'நான் அடுத்த தளபதியாக முயற்சிக்கவில்லை...' என்று, அமரன் நடிகர் வாய் பேச்சுக்காக சொன்னபோதும், மனதளவில், 'நான்தான் அடுத்த தளபதி...' என்ற நினைப்பில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று அவரிடம் கதை சொன்ன சில இயக்குனர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, உச்ச நடிகர், தளபதி நடிகரின் முந்தைய படங்களில் இடம்பெற்ற, மாஸான சீன்களை போல், மீண்டும் அதைவிட மாஸான காட்சிகளாக உருவாக்கி, அதில் தன்னை நடிக்க வைக்க வேண்டும் என்று கறாராக சொல்கிறார்.

இதனால், நாங்கள் கதைகளை புதிதாக யோசித்தாலும், அதில் முந்தைய படங்களிலிருந்து முக்கிய சீன்களை சுட்டு, இவர் படங்களுக்கு வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் புலம்பித் தள்ளுகின்றனர் அந்த இயக்குனர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !