உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்'

‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்'


விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் ‛சக்தித் திருமகன்' திரைப்படம் வெளியான நிலையில் அடுத்ததாக அவர் தற்போது சசி இயக்கத்தில் சற்றே நீட்டிக்கப்பட்ட சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் ‛நூறு சாமி' திரைப்படம் அவரது அடுத்த படமாக ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக விஜய் ஆண்டனி ‛லாயர்' என்கிற படத்திலும் நடித்து முடித்து விட்டார். ‛ஜென்டில் உமன்' என்கிற படத்தை இயக்கிய ஜோஸ்வா சேதுராமன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படமும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள ‛வள்ளிமயில்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் பைனான்ஸ் பிரச்னைகள் காரணமாக நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ‛நூறு சாமி' திரைப்படம் இப்போதுதான் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது. அதே சமயம் ‛லாயர்' படம் முன்கூட்டியே தயாரானாலும் கூட நூறு சாமி படம் வெளியான பிறகு தான் அந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

விஜய் ஆண்டனியின் கடந்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறாத காரணத்தினால் சசி - விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகும் நூறு சாமி திரைப்படம் அடுத்து வெளியானால் ரசிகர்களிடம் அந்த படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும், அதை வைத்து அதற்கு அடுத்ததாக லாயர் திரைப்படத்தை வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !